பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார், நயன்தாரா.

கொரோனா காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, மலையாளத்தில் உருவாகும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார், நயன்தாரா.

இதில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடங்கியது.

இதன் படப்பிடிப்பில், நயன்தாரா சமீபத்தில் இணைந்தார். குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டிவென்டி 20 படத்தில் சின்ன காட்சியில் நடித்திருந்தனர்.

12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, தன்னுடன் நடிக்கும் குஞ்சாக்கோ போபன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
அங்கு அவர் மகன் இஜாஹாக் குஞ்சாக்கோவை கையில் தூக்கி வைத்தபடி செம ஸ்டைலாக எடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles