தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று (நவம்பர் 22) தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோரும் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 1,303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தொடக்கம் முதலே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி முன்னிலையில் இருந்தார்.

பின்னர் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 557 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார். செல்லாத வாக்குகள் 17. துணைத் தலைவர்களாக ‘ஆடுகளம்’ கதிரேசனும் ஆர்.கே.சுரேஷும் வெற்றி பெற்றனர்.

செயலாளர்களாக ராதா கிருஷ்ணனும் மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles