30 வயதில் பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல சீரியல் நடிகைபிரபல சீரியல் நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது, இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர், ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்பட சில டிவி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு கடந்த ஒரு வருடமாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், இதுபற்றி நெருங்கிய நண்பர்களுக்கு கூட அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சனிக்கிழமை திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு வயது 30.

இதை அவருடன், கிளாஸ் ஆஃப் 2020 என்ற தொடரில் நடித்த நடிகர் ரோகம் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் சோசியல் மீடியாவில் லீனாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த வருடம் இதே நாளில் கிளாஸ் ஆப் 2020 ஷூட்டிங்கில் இருந்தோம். இப்போது உங்களை இழந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

பிரபல சீரியல் நடிகை

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles