சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான இவர், இந்தியில், ‘நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ’ என்ற படத்தில் போலீஸாக நடித்து புகழ்பெற்றவர்.

மேலும், ஹோம் டெலிவரி, மேரே பஹேலா பஹேலா பியார், ராஜா நட்வாரியல், பர்கா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தம் தமா தம், யெஸ் பாச், ரீமிக்ஸ், மேரே ஆங்னே மே, ஆரம்ப் உட்பட பல தொடர்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

இவர் கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சிகிச்சைக்குப் பணம் இல்லை என்றும் டயாலிஸ் செய்வதற்கு உதவுங்கள் என்றும் தனது பேஸ்புக்கில் உருக்கமாகக் கூறியிருந்தார்.

அவருடன் நடித்த சக நடிகர்கள் உதவினர். அப்போது, ‘நான் சிரீயசான நிலையில் இருக்கிறேன். நான் பிழைப்பேனா இல்லையா என்பதை இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்து கொள்வீர்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று உயிரிழந்துள்ளார். இதை சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது.

அசீஷ் ராயின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் நடித்தவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles