அடுத்த மாதம் திருமணம்! ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த முல்லை! மீளமுடியா அதிர்ச்சியில் ரசிகர்கள்!

“விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஷூட்டிங் நேற்று சென்னையின் புறநகர் பகுதியான நசரத் பேட்டையில் நடந்தது. அதற்கான ஷூட்டிங்கில் சித்ரா கலந்துகிட்டாங்க. அவரைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்த ஹேமந்த் ரவியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்.”

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வருபவரும் தன் ரசிகர்களால் சித்து என அழைக்கப்பட்டவருமான நடிகை சித்ரா நேற்று இரவு சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது அவரது உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் இவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரது திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கையில், “விஜய் டிவியின் ஒரு ஸ்பெஷல் ஷோவின் ஷூட்டிங் நேற்று சென்னையின் புறநகர்ப்பகுதியான நசரத்பேட்டையில நடந்தது.

அதற்கான ஷூட்டிங்கில் சித்ரா கலந்துகிட்டாங்க. அவங்களைத் திருமணம் செய்துகொள்ள இருந்த ஹேமந்த் ரவியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்.

நிச்சயதார்த்ததுக்குப் பிறகு அப்பப்ப அவர்தான் சித்ராவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவார்.

அந்த எபிசோடின் ஷூட் முடிஞ்சு லேட் நைட் ஆனதாலேயோ என்னவோ வீட்டுக்குப் போகாம பக்கத்துல இருந்த நட்சத்திர ஓட்டல் ஒண்ணுல தங்கியிருக்காங்க. சித்ராவின் குடும்பமும் வருங்காலக் கணவருமே அந்த ஓட்டல்லதான் தங்கியிருந்ததாத் தெரியுது.

குடும்பமா ஏன் ஹோட்டலுக்கு வந்தாங்கன்னு தெரியல. இந்தச் சூழல்லதான் பின்னிரவுல தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சித்ரா தற்கொலை செய்திருக்காங்க” என்றார் சேனலுக்கு நெருக்கமானவர்.

சித்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles