கோலாகலமாக ஆரம்பித்த 91ஆவது ஆஸ்கார் விருது விழா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

இதில் இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.

ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)

தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரோமா படத்திற்காக அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த ஒலி படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருது போகிமியன் ராப்சோடி படத்திற்கு கிடைத்தது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles