ரகசிய திருமணத்துக்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார், சிம்பு பட ஹீரோயின்.
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர், சனாகான். இதையடுத்து தமிழில் சில படங்களில் நடித்தார்.
மும்பையை சேர்ந்த நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். பின்னர் அவரை பிரிந்தார்.
இதற்கிடையே, கடந்த மாதம், தான் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இந்நிலையில், அவர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கணவரின் கையை பிடித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்கி வருவது போலவும் கேக் வெட்டுவது போலவும் அந்த வீடியோ காட்சி இருந்தது.
எப்போது இந்த திருமணம் நடந்தது என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.