இயக்குனர் சிம்புதேவனுக்கு இன்று பிறந்தநாள்

யாரும் யோசிக்க முடியாத வித்தியாசமான திரைப்படங்களில் காமெடி கலந்து மக்களை ரசிக்க வைப்பதில் வல்லவர் இயக்குனர் சிம்புதேவன்.

மற்ற இயக்குனர்களிடமிருந்து சிந்தனையிலும், இயக்கத்திலும் முற்றிலும் வித்தியாசமான இயக்குனர் சிம்புதேவன் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார்.

அவருக்கு பிரபலங்கள் பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியதற்கு பிறகு அறை என் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி என வித்தியாசமான திரைப்படங்களை ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத பேன்ட்ஸி கதைகளைக் கொண்டு சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

இன்றளவும் தனித்துவமான இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது மிகவும் பிரபலமாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றில் இளம் நடிகர்களை வைத்து “கசடதபற” படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles