மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார்.

சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி, மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி அனைவரையும் அசர வைத்தார்.

இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற வித்தியாசமான காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்று இந்தியா முழுவதும் பல பிரபலங்களால் பிரபலமாக்கப்பட்டது. இப்பொழுது தமிழ் நடிகைகளிடையே மற்றுமொரு சேலஞ்ச் துவங்க நடிகை அதுல்யா மயக்கும் மூக்குத்தி அணிந்து கொண்டு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

அதாவது கிரீன் இந்தியா சேலஞ்ச் எப்படி செடிகளை நட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டுமோ அதேபோல மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் வரும் நயன்தாராவைப் போல மினுக்கும் மூக்குத்தி ஒன்றை அணிந்து கொண்டு அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு மூக்குத்தி அம்மன் சேலஞ்ச் இப்பொழுது தமிழ் நடிகைகள் இடையே பிரபலமாகி வரும் நிலையில், அதில் நடிகை அதுல்யா வைரம் போன்று மினுக்கும் மூக்குத்தி ஒன்றை அணிந்து கொண்டு அட்டகாசமான லுக்கில் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிட்டதோடு அதில் நடிகை இந்துஜா, ஆர் ஜே பாலாஜி, மற்றும் ஸ்மிர்தி வெங்கட் உள்ளிட்டோருக்கு மூக்குத்தி அம்மன் சவாலை செய்து காட்டும்படி சவால் ஒன்றை விடுத்திருக்கிறார்.

நடிகை வாணி போஜன், மேகா ஆகாஷ், விஜே பார்வதி, ஆத்மிகா என பலரும் இந்த சேலஞ்சை செய்து காட்டி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதையடுத்து இப்பொழுது கோலிவுட்டில் மூக்குத்தி அம்மன் சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles