பழம்பெரும் சினிமா பாடலாசிரியர் குமார தேவன். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
குமாரதேவன், பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 88 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். குமார தேவனுக்கு , கே.லட்சுமி என்ற மனைவியும், விஜய வெங்கடேஸ்வரி, சுபத்ரா தேவி ஆகிய மகள்களும் உள்ளனர்.
யானைப்பாகன் படத்தில் எழுதிய பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை… ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் எழுதிய நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ்போல் வான் மழைபோல் சிறந்து என்றும் வாழ்க…, தேன் கிண்ணம் படத்தில் இடம்பெற்ற தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன்கிண்ணம், உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் காதல் கொண்டேன் வா… ஆகியவை இவர் எழுதிய பாடல்களில் முக்கியமானவை.