கௌதம் கார்த்திக் நடிக்கும் “புரடக்‌ஷன் நம்பர் 2” கோலாகல ஆரம்பம்

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S.எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள்.

தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது.

தமிழின் தலைசிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில் முதன்முறையாக தனது திரைப்பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தபடத்தை இயக்குகிறார் இயக்குநர் S. எழில்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் தாண்டி மேலும் பல முக்கிய தமிழ் நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்குபெறவுள்ளார்கள்.

பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமார் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். C.முருகேஷ் பாபு இப்படத்தின் வசனமெழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் D இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக N R சுகுமாரன் பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles