பிரபல இந்தி நடிகை மந்தனா கரிமி. ராய் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய இவர், பிறகு ஹீரோயின் ஆனார்.
ஷிவம் நாயர் இயக்கிய பாக் ஜானி என்ற படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து மெயின் அவுர் சார்லஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
பிறகு கியா கூல் ஹே ஹம் 3 உள்பட சில படங்களில் நடித்த மந்தனா கரிமி, ஈரானில் பிறந்தவர். அவர் அம்மா, இந்தியாவை சேர்ந்தவர்.
அப்பா ஈரானியன். விமானப் பணிப் பெண்ணாக வாழ்க்கையை தொடங்கிய மந்தனா, பிறகு வேலையை உதறிவிட்டு, மாடலிங் உலகுக்கு வந்தார்.
பல விளம்பர படங்களில் நடித்த அவருக்கு இந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடித்து வரும் அவர், டிவி சிரீயல்களிலும் நடித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு இன்னும் அதிகம் பிரபலமானார். த கேசினோ என்ற வெப் சிரிஸிலும் நடித்துள்ளார்.
இவர் தொழிலதிபர் கவுரவ் குப்தா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர், இப்போது நடித்து வரும் படம், கோகோ கோலா. இதை மகேந்திர தாரிவால் தயாரிக்கிறார். இதில் சன்னி லியோனும் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் அன்று தயாரிப்பாளர் மகேந்திர தாரிவால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் கூறியுள்ளார் அவர்.
‘இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்தே எனக்குப் பிரச்னை. கடைசி நாள் ஷூட்டிங் அன்று, ஷூட்டிங் முடிந்ததும் நான் சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்றேன்.
அவர் நான் இருந்த வேனிட்டி வேனுக்கே வந்து, கூடுதல் நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால் நான் தான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று மிரட்டினார் என்றார்.
ஆனால் தாரிவால் கூறும்போது, அதிக நேரம் இருக்க வேண்டும் என்றால் இன்னும் ரூ.2 லட்சம் வேண்டும் என்று மந்தனா கேட்டார். நான் மறுத்தேன். பிறகு கொடுத்துவிட்டேன். இதுதான் நடந்தது என்றார்.