இளம் நடிகை பரிதாப பலி.. நேர்ந்த விபரீதம்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளியன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 27.

அவர் கடைபிடித்து வந்த கீட்டோடயட் தான் அவரது சிறுநீரகம் செயலிழந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. நடிகை மிஷ்டி முகர்ஜியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles