இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடும். கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,
விஜயின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அனிருத் இசையில் அண்மையில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில், கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.
One Nation At Home என்ற லைவ்வில் ரசிகர்களுக்காக யூடியூப்பில் வந்த அனிருத் தனது ஹிட் பாடல்கலான பாடல்களை பாடி அசத்தினார்.