7 வருட சாதனையை தகர்த்த Rowdy Baby!

தனுஷ்,சாய் பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே வைரல் ஹிட் ஆனது.பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.

யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் யூடூப்பில் வேற லெவல் ரீச்சை பெற்றது.தனுஷின் catchy-ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது.

ஆடியோ ரிலீஸின் போதே tiktok-ல் பலரால் பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சாதனையையும் படைத்தது.அடுத்ததாக youtube-ல் வீடியோ வந்தவுடன் பல சாதனைகளை படைத்தது.

தில்லு முல்லு இரண்டாம் பாகத்தில் ரஜினி

பிரபுதேவாவின் அசத்தலான steps-க்கு தனுஷ்,சாய் பல்லவி இருவரும் அசத்தலாக நடனமாட views எகிறியது.

தமிழில் அதிவேகமாக 100 மில்லியன் ,150 மில்லியன் என சாதனைகளை அடுக்கிய இந்த பாடல் தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை youtube-ல் அதிக முறை பார்க்கப்பட்ட தமிழ் விடியோவாக இருந்தது. அனிருத் இசையில் தனுஷ் பாடல்வரிகள் எழுதிய கொலவெறி பாடல் தான்.

175 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்த இந்த பாடலை பின்னுக்கு தள்ளி Rowdy Baby பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் 7 வருடமாக தொட முடியாமல் இருந்த தனது பாடலான கொலவெறியின் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் தனுஷ்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles