ரஜினி படத்தில் மீண்டும் அனிருத்

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் 166-வது படமாம்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஷூட்டிங்கை மார்ச் மாதம் சென்னையில் தொடங்கவுள்ளனர். சென்னை ஷெடியூலை தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அனிருத்தே மீடியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார். ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles