பிக்பாஸில் பங்கேற்கும் சிம்பு, லாரன்ஸ் பட நடிகைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியில் இந்நிகழ்ச்சி இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இதன் 14-வது சீசன் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை நடிகர் சல்மான் கான் அறிமுகம் செய்து வைத்தார்.

அவற்றில் ஜாஸ்மின் மற்றும் நிக்கி டம்போலி ஆகியோர் தமிழ் சினிமாவில் நடித்தவர்கள். ஜாஸ்மின் என்பவர் வானம் படத்தில் சிம்புவின் காதலியாக நடித்திருந்தார்.

அதேபோல் நிக்கி டம்போலி, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இன்று தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles