தமிழக முதல்வருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் விசாகன் – செளந்தர்யா திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை அளித்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல்ஹாசன் உள்பட பலருக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்த ரஜினிகாந்த் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் விடுத்தார்.

ரஜினியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், செளந்தர்யா திருமணத்தில் கலந்து கொள்ள சம்மதித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles