செல்வராகவன் வீட்டுக்கு புது வரவு… வைரல் புகைப்படம்

கடந்த 2011ஆ ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை கீதாஞ்சலி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

இப்போது, தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து கீதாஞ்சலி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

கீதாஞ்சலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜனவரியில் குட்டி செல்வா அல்லது குட்டி கீதாஞ்சலியை காண ஆவலாக உள்ளோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles