கைது செய்யப்படுகிறாரா விஷால்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்

அதுமட்டுமின்றி நடிகர் விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பணத்துக்கு நிறுவனம் சார்பில் வரிபிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு பிடித்தம் செய்த தொகையை விஷால் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. மேலும் இதுகுறித்து வருமான வரித்துறை விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை விஷாலுக்கு வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles