அயோக்யா ரிலீஸ் ஒத்திவைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி எதிர்பாராத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி ஆரம்பிக்கவிருந்த நிலையில் திடீரென இந்த படம் இன்று ரிலீஸ் இல்லை என, படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அயோக்யா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ஒரு நடிகனாக செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன். ஆனால் அது மட்டும் ரிலீசுக்கு போதுமானதாக இல்லை. என்னுடைய நேரம் ஒருநாள் வரும். இருப்பினும் நான் என்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles