11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்... வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார்.

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்... வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.

இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0