அஜித் ரசிகர்களே, வலிமை ஃபஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்து வருபவர். தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய உதாரணமாக இருந்து வருகிறார்.

அஜித் ரசிகர்களே, வலிமை ஃபஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணித்து வருபவர். நடிகர் ஒரு படம் நடித்தால் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற அடையாளத்தை எல்லாம் உடைத்து தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்து வருபவர். தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய உதாரணமாக இருந்து வருகிறார்.

அண்மையில் மற்றவர்கள் கொரோனாவால் தவிக்கும் போது தன் பட ஃபஸ்ட் லுக்கை வெளியிடுவது சரியில்லை என ஒத்திவைத்தார். மற்றவர்களை பற்றி யோசிக்கும் அவரது அந்த குணத்தை எல்லோரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் ஃபஸ்ட் லுக் வரவில்லை என்ற சோகத்தில் உள்ளனர். தற்போது கசியும் தகவல் என்னவென்றால் அஜித்தின் வலிமை பட ஃபஸ்ட் லுக் ஜுலை மாத நடுவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0